உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியயுள்ளது, அதாவது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,920,905ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
மேலும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 54,256ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,36,683 ஆக உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 960,651 என்றும், அமெரிக்காவில் 54,256 பேர் கொரோனாவால் மரணம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 223,759 என்றும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 22,902 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தாலியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 195,351 என்றும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 26,384 என்றும் பிரான்ஸில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 161,488 என்றும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 22,614 என்றும், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 26,283 என்றும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 825 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.