மனிதத் தவறுகளால்தான் பொருளாதார மந்தநிலை – மன்மோகன் சிங் விமர்சனம் !

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:30 IST)
நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக்கு பாஜக அரசின் தவறான முடிவுகள்தான் காரணம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளட் பொருளாதார மந்த நிலையால் ஆட்டோமொபைல்ஸ் தொழில் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி சதவிகிதம் 5.8 லிருந்து 5 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் இந்திய பிரதமரும் பொருளாதார வல்லுனருமான மன்மோகன் சிங் ‘ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாக குறைந்திருப்பது இந்தியாவில் நீண்ட நாட்கள் தேக்க நிலை நீடித்ததற்கான ஆதாரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 0.6 சதவிகிதமாக குறைந்திருப்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிலைக்குக் காரணம் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளேக் காரணம். ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்