மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (10:56 IST)

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தற்போது டெல்லியில் தொடங்கியது.

 

 

இந்திய முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

அவரது மறைவை தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி வரை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

 

மன்மோகன் சிங் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 8 மணியளவில் டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட அவரது உடல் தற்போது தகனத்திற்காக இறுதி யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது.

 

காங்கிரஸ் முக்கிய தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்