ஜன்னல் கம்பிக்குள் நுழைந்து திருட 10 கிலோ உடல் எடையைக் குறைத்த நபர்! சிக்கியது எப்படி?

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (09:46 IST)
அகமதாபாத்தில் தன்னாள் முன்னாள் முதலாளி வீட்டில் கொள்ளையடிக்க மூன்று மாதங்களாக குறைவான உணவு சாப்பிட்டு 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மோடி சிங் சஹ்வான் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை 10 கிலோ வரை குறைத்திருக்கிறார். அதுவும் எதற்காக தெரியுமா?. தன்னுடைய முன்னாள் முதலாளி வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியின் வழியே உள்ளே நுழைந்து திருடுவதற்காகதான்.

வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த அவர் 37 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றுள்ளார். ஆனால் அவர் விட்டுச் சென்ற கட்டிங் பிளேயரில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் மூலம் அவரை ட்ராக் செய்து போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்