திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:23 IST)
தெலங்கானாவில் இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஸ்ரீகாந்த் சாரி. இவர் தங்கநகைகள் செய்யும் வேலை செய்துவந்துள்ளார். 39 வயதாகியும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் தனது செல்போனில் இருந்து சகோதரிக்கு அழைத்து தற்கொலை செய்யப்போவதாக சொல்லியுள்ளார்.

இதனால் அவர் பதறி அடித்து சாரி வசிக்கும் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே சாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சகோதரியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் ‘சாரி திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்