முதியரை ஸ்கூட்டியின் பின்புறம் இழுத்துச் சென்ற நபர் கைது,

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (22:17 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று ஒருவர் தன் ஸ்கூட்டியின் பின்புறம் 1.கிமீ தொலைவுக்கு சாலையில் ஒரு முதியவரை இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர்  நகரில் உள்ள மகடி சாலையில், இன்று ஒரு நபர் ஸ்கூட்டி ஓட்டிச் சென்றார்.

அப்போது, ஒரு முதியவர் ஓட்டி வந்த கார் இவரது ஸ்கூட்டி மீது  மோதியுள்ளது. இதையடுத்து, முதியவர் ஸ்கூட்டி ஓட்டி வந்த   நபரை நிற்கும்படி கூறியுள்ளார்.
ஆனால், அவர் ஸ்கூட்டியை நிற்காமல் சென்றுள்ளார், அவரைப் பிடிக்கும்  நோக்கும் அவர் ஸ்கூட்டரின் பின் பகுதிக் கம்பியைப் பிடித்துள்ளார்.

ஆனால், அந்த நபர்  நிற்காமல் அவரைத் தொங்கியபடி 1 கிமீ தூரம் இழுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற நபரைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்