நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற வரும் நிலையில் மேற்குவங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாஜகவும், தனது கோட்டையை தக்க வைத்து கொள்ள மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், துர்காபூர் நகரில் இருந்து அசன்சோலுக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ய மம்தா திட்டமிட்டிருந்தார். ஹெலிகாப்டர் ஏறும்போது மம்தா பானர்ஜி கால் தவறி ஹெலிகாப்டரின் இருக்கைக்கு அருகே கிழே விழுந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி மம்தாவை உடனடியே தூக்கி விட்டார். இருப்பினும் மம்தா பானர்ஜிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சமீப காலமாகவே, மம்தா சிறிய சிறிய விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.