2 ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (11:20 IST)
மலேசியாவில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியா நாட்டின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர் நேருக்கு நேர் திடீரென மோதிக்கொண்டது. இதனை அடுத்து ஹெலிகாப்டர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கோலாலம்பூரில் நடுவானில் ஹெலிகாப்டர் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் இந்த விபத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் மலேசியாவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்த மலேசியா அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்