மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 15051 பேருக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (21:46 IST)
இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளான மாநிலமான மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 48 பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர், உள்பட 6 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதே ரீதியில் கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே சென்றால் இன்னும் பல நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்