இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரொனா அதிகரித்தலை தவிர்க்க மார்ச் 15 முதல் 21 வரை ஒருவார கால முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் தற்போது நாக்பூரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.