பெண்ணை அடித்து மூக்கை உடைத்த ஸொமோட்டோ ஊழியர்! – பெங்களூரில் கைது!

வியாழன், 11 மார்ச் 2021 (11:31 IST)
பெங்களூரில் உணவு டெலிவரி செய்ய சென்ற ஸொமோட்டோ ஊழியர் வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் வைரலான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு டிசிபி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் சமீபத்தில் ஸொமோட்டோ மூலமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் அந்த உணவை டெலிவரி செய்ய சென்ற ஸ்ரீநாத் என்ற நபருக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த டெலிவரி பாய் அந்த பெண்ணை மூர்க்கமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து காயம்பட்ட நிலையில் பெண் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உதவுமாறு கேட்டுக்கொண்டது வைரலானது. அதை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் டெலிவரி பாயை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தனது வருத்தங்களை தெரிவித்துக் கொண்ட ஸொமோட்டா நிறுவனம் பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும், இழப்பீட்டையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்