மேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.389 கோடி மோசடி செய்ததாக பிரபல நிறுவனம். சிபிஐ வழக்குப்பதிவு

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (08:08 IST)
விஜய் மல்லையா, நீரவ் மோடியை அடுத்து மேலும் ஒரு நிறுவனம் வங்கியில் கடன் பெற்று திருப்பி கட்டாமல் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லியை சேர்ந்த முன்னணி வைரநகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் ரூ.389.85 கோடி சட்டவிரோதமாக கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த வைரநகை நிறுவனத்தின் நான்கு இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2012 வரை ரூ.389.85 கோடி கடன் பெற்று திருப்பி கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்