70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2015 (10:17 IST)
உணவு ஏதும் உட்கொள்ளாமல் காற்றை மட்டும் சுவாசித்து, கடந்த 70 ஆண்டுகளாக ஒரு துறவி உயிர்வாழ்வதாகக் கூறியுள்ளார்.
 
நீண்ட சடாமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இந்த 83 வயதுத் துறவி தான் தியானத்தின் மூலம் சக்தியைப் பெறுவதாகத் தெரிவிக்கின்றார். சிவப்பு நிற ஆடையுடனும் மூக்கில் வளையம் அணிந்தவராகவும் காணப்படும் ஜானி, குஜராத்திலுள்ள மேக்சானா மாவட்டத்திலுள்ள சாரோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
 
இவர் தனக்கு 8 வயதாக இருக்கும் போது சக்தியின் ஆசி பெற்றதாகவும் அதனாலேயே உணவின்றி உயிர்வாழ முடிவதாகவும் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஜானி, தனது வாயினுள் வீழ்ந்த துளி நீர் காரணமாகவும் அதிசயிக்கத்தக்க வகையில் தான் உயிர்வாழ்வதாகக் தெரிவித்துள்ளார். வெதுவெதுப்பான நீரை மட்டும் அருந்தி வந்த அவர், சிலவேளைகளில் ஏதேனும் விடயத்தில் ஈடுபட்டிருக்கும் போது பசி, தாகம், குளிர், சூடு என்பன உணரப்படுவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து மருத்துவமனை ஒன்றில் இவரை அடைத்து வைத்து வெறும் குடிநீரை மட்டுமே உணவாக அளித்து சோதனை செய்து பார்த்துள்ளனர். இவ்வாறு 15 நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த அவர், நீரை தவிர உணவேதும் உண்ணாமல் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிசயித்துள்ளனர்.