இரத்த தானம் செய்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு - அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (20:24 IST)
பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வேலை நாட்களில் ரத்த தானம் கொடுப்பதாக இருந்தால் அன்றைய தினம் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அரசு ஊழியர்கள் ரத்த தான்ல் கொடுப்பதாக இருந்தால் அது தற்செயல் விடுப்பாக  இருந்தது. ஆனால் இனிமேல் ரத்த தானம் கொடுப்பவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
மேலும் இதுகுறித்து அனைத்துதுறை தலைமை அதிகாரிகளுக்கும் மாநில கூடுதல் தலைமைச்செயலர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , இரத்த தானத்தை ஊக்குவிக்கவும் தான் இம்முடிவு அரசால் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்