’ புல்வாமா,’பாலகோட் தாக்குதல்களை’ அரசியலாக்கும் தலைவர்கள்..?

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (10:49 IST)
நேற்று முந்தினம் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல்  நடத்தியது. 21 நிமிட தாக்குதலில் 350 தீவிரவாதிகள் அழிந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பறந்து சென்று தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நம் இந்திய விமானி பாகிஸ்தான் நாட்டுக்குள் விழுந்தார். பின்னர் அந்நாட்டு ராணுவத்தினரின் பிடியில் அவர் வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.
இந்நிலையில் பாலகோட் தாக்குதலால் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் பாஜகவுக்கு 22 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானியை பாகிஸ்தானிலிருந்து விடுவிக்க வேண்டுமென இந்தியா அழுத்தம் கொடுத்துவரும் வேளையில் தற்போது இதை பால்கோட் தாக்குதலை செய்துவருவதுதான் வேதனையாக உள்ளதாக இந்திய அமைச்சரவை காலையில் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை புல்வாமா தாக்குதலை அரசியலோடு தொடர்புபடுத்தி நாற்பது தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என கூறியதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போன்று பல கட்சி தலைவர்களும் புல்வாமா, பாலகோட் தாக்குதலை அரசியலாக்கி பேசி வருவது வருத்தமளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து  தேசத்திற்காய் குரல்கொடுக்க வேண்டிய நேரம் இது. இப்போது அரசியல் செய்ய வேண்டாம் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்