குடும்பத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய லாலு பிரசாத் யாதவ்..! புகைப்படங்கள் வைரல்.!!

Senthil Velan
திங்கள், 25 மார்ச் 2024 (16:43 IST)
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். 
 
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் லாலு பிரசாத் யாதவ் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்.
 
ஹோலி கொண்டாட்டத்தின்போது தனது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் ரோஹிணி ஆச்சார்யா, மிசா பார்தி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..! எதற்காக தெரியுமா..?
 
இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், அன்பு, மகிழ்ச்சி கலந்த வண்ணமயமான பண்டிகை ஹோலி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நல்ல நாளில் அனைத்து சூழலிலும் அன்பு மற்றும் சகோதரத்துவம் மேலோங்கி நிற்க உறுதியேற்போம் என்றும் இந்த வண்ணமயமான விழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் பெருக்குவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்