ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

Prasanth Karthick

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (14:14 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வரும் 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் காலியாகி உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும், டெல்லி தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

 

இதனால் ஒரு ஆட்சிக் காலத்திற்குள் மூன்று முறை தேர்தல் நடத்தப்பட்ட தொகுதியாக மாற உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதி. கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவேரா திருமகன போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருந்தபோதிலும் 2022ம் ஆண்டு ஜனவரியில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

 

அதை தொடர்ந்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்