பாதுகாப்பு குறைபாடு: மக்களைவையில் அத்துமீறி நுழைந்த இருவரால் பரபரப்பு!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (14:05 IST)
மக்களவைக்குள் இன்று அத்துமீறி நுழைந்த இருவரால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற அதே தினத்தில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இருவர்  புகை குச்சிகளை கையில் ஏந்தி  சபா நாயகரை நோக்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துமீறி நுழைந்த இருவரை அவையில் இருந்த எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.

மக்களவையில் இரண்டுபேர் அத்துமூறி  நுழைந்த நிலையில். நீலம், அன்மோல்ஷிண்டே ஆகிய இரண்டு பெண்களை டெல்லி காவல்துறையினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்