கேரளா முழுவதும் இன்று முதல் 30-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் ஆகஸ்டு 30 வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதே போல கேரளா முழுவதும் இன்று முதல் 30-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 30-ந் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.