கேரளா அரசு பள்ளியில் பலருக்கு கொரோனா! – தனியார் ட்யூசன் சென்டர் காரணமா?

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (10:25 IST)
கேரளாவில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த பள்ளியில் உள்ள 190 மாணவர்கள் மற்றும் 79 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பள்ளியில் கொரோனா பரவ அப்பகுதியில் உள்ள தனியார் ட்யூசன் செண்டர் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் 99 பேர் அந்த ட்யூசனில் படித்து வந்தவர்கள் என்பதால் அந்த ட்யூசன் செண்டர் மூலமாக பள்ளிக்கு கொரோனா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்