காற்றின் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க புதிய கருவி… கேரளாவில் கண்டுபிடிப்பு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:04 IST)
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் காற்றின் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க புதிய கருவி ஒன்றை கேரள தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

கேரளாவில் உள்ள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனம் ஷ்யாம் கிருஷ்ணன் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் ஸ்பீக்கர் போன்ற வடிவமைப்புக் கொண்ட வொல்ஃப் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கருவியை உள்ளரங்குகளில் பொருத்திவிட்டால் அது 15 நிமிடத்தில் சுமார் 99 சதவீதம் வரையிலான வைரஸ்களைக் கட்டுப்படுத்துகிறதாம்.

இந்தக் கருவியை 9 ஆண்டுகள் வரை, 60ஆயிரம் மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்