ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி !
திங்கள், 12 ஏப்ரல் 2021 (15:42 IST)
ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே முடுக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷியா ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் 3வது தடுப்பூசிக்கு ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்ற நிலையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.