கேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் ஜூலை 2021 வரை நீட்டிப்பு

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (19:41 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே 
 
மேலும் நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவிப்பின்படி ஜூலை 31 வரை மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவில் லாக்டோன் விதிமுறைகள் இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆம், 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை லாக்டவுன் விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா மாநிலம் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்