இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்.. கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பேச்சு

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (13:06 IST)
இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்.. கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பேச்சு
இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் தான் என்றும் நானும் இந்து தான் என கேரள கவர்னர் முகமது ஆரிப் கான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக கவர்னர் உள்பட பல கவர்னர்கள் சர்ச்சைக்குரியவர் என்று கருதப்படும் நிலையில் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் தான் என்றும் நானும் இந்து தான்  என்றும் கேரள கவர்னர் முகமது ஆரிப் கான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீங்கள் என்னை இந்து என்று அழைக்க வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை என்றும் இந்து என்பது புவியியல் சொல் என்றும் இந்தியாவில் வாழ்பவர்கள் இந்நாட்டின் நீரை குடித்து வாழ்பவர்கள் இந்நாட்டில் விளையும் உணவை உண்டு வாழ்பவர்கள் அனைவரும் இந்து என்று அழைத்துக் கொள்ள தகுதி உடையவர்கள் என்பதால் என்னையும் நீங்கள் இந்து என்று அழைக்க வேண்டும் என்று கூறினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கேரள கவர்னர் முகமது ஆரிப் கான் அவர்களின்  இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்