தமிழகத்தை விட அதிக அதிகமான கொரோனா பாதிப்பு: கேரளா அதிர்ச்சி

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (07:38 IST)
இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கேரள முதல்வர் மற்றும் கேரளா சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கையின் காரணமாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் கட்டுப்படுத்தப் பட்டது 
 
ஆனால் கடந்த சில வாரங்களாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தமிழகத்தைவிட கேரளாவில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 46281 என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 61791 என்பது ஆகும் 
 
அதேபோல் கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,393 ஆக இருந்தது. ஆனால் அதே நான்கு நாட்களில் கேரளாவில் கொரோனா வைரசால் 26,323பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கையை சிறப்பாக செய்து வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு விருதுகளும் வாழ்த்துக்களும் கிடைத்து வந்த நிலையில் தற்போது கேரளாவில் தமிழகத்தை விட அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்