ரஜினி ரசிகர்களை நம்பவில்லை… பாஜகவை நம்புகிறார் – கார்த்தி சிதம்பரம் கருத்து!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:57 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நம்பாமல் பாஜகவை நம்புவதாக எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்போதே அவரது ரசிகர் மன்றம் பரபரப்பாக அரசியல் வேலைகளை ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகையைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ‘ரஜினி தனது ரசிகர்களை நம்பாமல் பாஜகவை நம்பி கட்சி ஆரம்பித்துள்ளார்’ என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்