அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

Siva
புதன், 18 டிசம்பர் 2024 (17:31 IST)
அம்பேத்கர் மட்டும் பிறந்திருக்காவிட்டால் இன்னும் மோடி ரயில் நிலையத்தில் டீ விற்று கொண்டிருப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் கூட முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு வெற்றிகழக தலைவர் விஜய் உள்பட பலர் அமிர்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, டாக்டர் அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால் மோடி இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்று  கொண்டிருப்பார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால் நான் முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது என்றும், கால்நடைகள் மேய்த்திருப்பேன் என்றும், எங்களின் தலைவர் கார்கே காங்கிரஸ் தலைவர் ஆகியிருக்க முடியாது என்றும், ஏதாவது ஒரு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.

நீங்கள் கூட உள்துறை அமைச்சர் ஆகியிருக்க முடியாது என்று கூறிய சித்தராமையா , உங்கள் ஊரில் காயலான் கடை நடத்திக் கொண்டிருப்பீர்கள் என்றும், மோடி இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்று கொண்டிருப்பார் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்