13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கபடி மாஸ்டர் தற்கொலை

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (09:29 IST)
பெங்களூருவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கபடி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
பெங்களூரிவில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி (59). இவர் 13 வயது சிறுமி ஒருவருக்கு தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் உறவினர்கள் ருத்ரப்பாவை செருப்பால் அடித்து துவைத்தனர்.
 
மேலும் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த ருத்ரப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், தன் உடலை மருத்துவமனைக்கு தானமாக எழுதிவைப்பதாக கூறியுள்ளார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்