8 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு சிறைத்தண்டனை. மீண்டும் சர்ச்சையில் நீதிபதி கர்ணன்

Webdunia
திங்கள், 8 மே 2017 (22:18 IST)
முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதியும், இந்நாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியுமான நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு ஒன்றை சமீபத்தில் அறிவித்தார். இந்த உத்தரவை அடுத்து அவருக்கு மனநிலை சோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மனநல சோதனைக்கு அவர் சம்மதிக்கவில்லை.



 


இந்த நிலையில் தலைமை நீதிபதி உட்பட 8 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி கர்ணன் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தன்னை மனநல சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட எட்டு நீதிபதிகளுக்கும் மனநல சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்