பாம்பாகவும் முதலையாகவும் மாறும் மர்ம மரம்

Webdunia
திங்கள், 8 மே 2017 (21:46 IST)
ஆந்திரா மாநிலத்தில் நல்கொண்டா பகுதியில் உள்ள காடு ஒன்றில், விலங்குகளை போன்று தோற்றமளிக்கும் மர்ம மரம் ஒன்று அமைத்துள்ளது.



 

 
ஆந்திரா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள காடு ஒன்றில் இயற்கையாகவே வளர்ந்த மரம் ஒன்று உள்ளது. அந்த மரம் விலங்குகளின் தோற்றத்தை கொண்டு அமைந்துள்ளது. இது செயற்கையாக வடிவமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
 
இந்த மரத்தில் ஒரு பக்கத்தில் அன்கோண்டா பாம்பு போன்ற அமைப்பும், மறுபக்கத்தில் முதலை போன்ற வடிவவும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மரம் முழுவதும் கிங்காங் குரங்கு உருவம், சிலந்தி, தேள், பாம்பு, பறவைகள், பூச்சி இனங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் உருவமும் இருப்பதுடன், இவைகள் உயிருடன் இருப்பது போன்றும் தோற்றமளிக்கிறதாம்.
 
இந்த மரத்தை பற்றிய விவரம் இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த மரத்தை மரம் மரம் என்றும், அமானுஷ்ய மரம் என்றும் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்