விடைபெறாமல் சென்றதற்காக மன்னியுங்கள்: தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடிதம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (14:33 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள் மூத்த வழக்கறிஞர்களிடம் விடைபெறாமல் சென்றதற்காக மன்னியுங்கள் என கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும் இந்த இடமாற்றத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை தனது சொந்த ஊரான கொல்கத்தா புறப்பட்ட சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள் பிரிவு உபச்சார விழா தவிர்த்து விட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர்களுக்கு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி எழுதிய கடிதத்தில் தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடை பெறுவதற்காக மன்னியுங்கள் என்றும் ஆதிக்கக் கலாச்சாரத்தில் பணியாற்றுகின்றீர்கள் என்றும் தெரிவித்துள்ளார் அவரது இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்