டிராய் உத்தரவை ஏற்று இலவச சேவை நீட்டிப்பை ரத்து செய்த ஜியோ

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (22:54 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிரைம் திட்டத்தில் நீட்டிக்கப்பட்ட ஜியோ சம்மர் சர்பிரைஸ் இலவச சேவை உடனடியாக, ரத்து செய்துள்ளது.



 


முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியோடு ஜியோவின் இலவச சேவை முடிவுக்கு வர இருந்த நிலையில், ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டித்து இலவச சேவையை  ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தொடர முடிவு செய்தது.

ஜியோ பிரைம் திட்டத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதோடு, ஜியோ பிரைம் திட்டத்தின் கீழ், சம்மர் சர்பிரைஸ் என்ற பெயரில் மேலும் 3 மாத இலவச சேவை வழங்கப்படுவதாகவும் அறிவித்தது.

ஆனால் இதனை உடனடியாக நிறுத்தும்படி, ஜியோ நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. டிர்ராய் உத்தரவை ஏற்று  3 மாத சலுகை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்வதாக, தற்போது ஜியோ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஜியோ வாடிக்கையாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்