நாட்டின் முக்கிய பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வு வழியாக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். ஒன்று முதன்மைத் தேர்வு இரண்டாவது பிரதானத் தேர்வு.
இந்நிலையில், 2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு பிப்ரவரி 1 அன்று தொடங்கி 26-ம் தேதி நிறைவு பெற்றது. தற்போது, இந்த தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் இந்த தேர்வு அட்டவணையை jeemain.nta.nic.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம். மேலும், ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை www.nta.ac.in வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.