பஸ் பாஸ் வைத்து இனி ஏசி பஸ்ஸிலும் போகலாம்! சென்னையில் அதிரடி மாற்றம்!

Prasanth Karthick

வியாழன், 13 மார்ச் 2025 (08:53 IST)

சென்னையில் பேருந்துகளில் பஸ் பாஸ் மூலமாக ஏசி பேருந்துகளிலும் பயணிக்க நடைமுறை விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னை மாநகர் முழுவதும் சென்னை மாநகர பேருந்துகள் பல வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், ஏசி பேருந்துகள் என பல வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் டிக்கெட் கட்டணமும் பேருந்துக்கு ஏற்றவாறு மாறுகிறது.

 

இந்த பேருந்துகளில் மாத பாஸ் எடுத்து பயணிக்கும் நடைமுறையும் செயல்பாட்டில் உள்ளது ரூ.320 தொடங்கி ரூ.1000 வரை பல வகையான பஸ் பாஸ் வசதி உள்ளது. இதில் மாதம் ரூ.1000 பாஸ் எடுத்தால் அரசு ஏசி பேருந்து தவிர்த்த அனைத்து பேருந்துகளிலும் மாதம்தோறும் எந்த வழித்தடத்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ளலாம் என்ற வசதி உள்ளது.

 

இந்த பஸ் பாஸ் வசதியை தற்போது ஏசி பேருந்துகளுக்கும் நீட்டிக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.2000 பஸ் பாஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரூ.2000 பாஸ் எடுத்தால் மாதம்தோறும் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்து கொள்ள முடியும். இந்த புதிய பாஸ் நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்