2025 ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ பிரதான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை படிப்பில் சேர, ஜே.இ.இ தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ பிரதானத் தேர்வு அடுத்த ஆண்டு மே 18 ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக தலா மூன்று மணி நேரம் நடத்தப்படும். மாணவர்கள் இரு தேர்வுகளையும் கட்டாயம் எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், இரண்டாம் நாள் மதியம் 2:30 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.
முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஜே.இ.இ முதன்மை தேர்வை எழுத முடியும். அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 23 ஐ.ஐ.டிகளில் சேர்க்கை இடங்கள் கவுன்சிலிங் மூலம் வழங்கப்படும். இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி உள்பட அனைத்து விவரங்களையும் மாணவர்கள் அறிவிப்பில் https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Edited by Siva