ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் வழக்கறிஞரின் பெயர் நீதிபதி பதவிக்கு பரிந்துரை

Webdunia
வியாழன், 5 மே 2016 (13:53 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதாடி வரும் நாகேஸ்வரராவை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு‘கொலிஜியம்‘ அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
 

 
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு பல ஆண்டுகளாக இருந்த ‘கொலிஜியம்‘ முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை, பாஜக அரசு அமைத்தது. இந்த முறையை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்தது.
 
எப்போதும் போல ‘கொலிஜியம்‘ முறைப்படி நீதிபதிகளே, நீதிபதிகளை நியமிப்பார்கள் என்றும் கூறிவிட்டது. அந்த தீர்ப்புக்கு பின்னர், 15 மாதங்கள் கழித்து இப்போதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
 
இந்த பட்டியலில், மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
இந்த பரிந்துரைகள் ஏற்படும் நிலையில், நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் 7-வது நீதிபதியாக இருப்பார்.

 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்