19 செயற்கைக்கோள்களுடன் தயார் நிலையில் பிஎஸ்எல்வி சி51 – இன்று விண்ணில் பாய்கிறது!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (09:46 IST)
அமெரிக்க, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான 19 செயற்கைக்கோள்களுடன் இன்று புறப்படுகிறது இந்தியாவின் பிஎஸ்எல்வி சி51

விண்வெளி அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ள இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களையும் மொத்தமாக விண்வெளிக்கு அனுப்பவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 செயற்கை கோள்கள், இந்தியாவின் 5 செயற்கைக்கோள்கள் மற்றும் பிரேசிலின் அமேசானியா பிரதான செயற்கைக்கோள் ஆகிய 19 செயற்கைக்கோள்களை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்காக ஸ்ரீஹரிஹோட்டாவில் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் ஆரம்பமான நிலையில் காலை 10.24 மணிக்கு ரக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்