ஜிசாட் 30 செயற்கைகோள்: வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (10:36 IST)
இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைக்காக அதிநவீன ஜிசாட் 30 செயற்கை கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ!

இந்தியாவில் தகவல் தொடர்பு சேவைகளுக்காக அதிநவீன தொழ்லிநுட்ப வசதிகள் கொண்ட ஜிசாட் 30 செயற்கைகோள் உருவாக்கப்பட்டது. 3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட் செயற்கைகோள் பிரெஞ்சு கயானாவிலிருந்து அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

காற்று மண்டலத்தை தாண்டி சென்ற ஜிசாட் வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதுவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தொலைதொடர்பு சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்30 பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்