ஏற்கவே இஸ்ரேல் நாட்டு ராணுவம், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீதும் பாலஸ்தீனம் மீது போர்தொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது நேரடி ராணுவத் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பு தயாரி நிலையை அதிகரித்துள்ளது.
அதேபோல், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் அமெரிக்காவும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 1 ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.