’லே’ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது-சோனம் வாங்சுக்-

Sinoj
சனி, 6 ஏப்ரல் 2024 (14:30 IST)
’லே’ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது என்று சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
 
நாளை சுழலியல்  ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் இந்தியா -சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்.ஏ.சி) நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், லே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ’லே’ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது என்று சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
லடாக் வாசிகளை தேச விரோதிகள் என்று முத்திரை குத்த முயற்சிகள் நடக்கிறது.
 
லடாக் மக்களவை பற்றியோ தேசியப் பாதுகாப்பு குறித்தோ அரசு கவலைப்படுவதில்லை.
அமைதியான முறையில் போராடும் இளைஞர்கள் மீது புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பலர் கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்