மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

Prasanth Karthick
திங்கள், 3 பிப்ரவரி 2025 (16:58 IST)

மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தில் அம்மாநில முதலமைச்சருக்கு தொடர்பிருப்பதாக வெளியான ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக குய்கி, மெய்தி இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் தொடர்ந்து படுகொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் பல கிராமங்களுக்கும் பரவிய நிலையில் துணை ராணுவம் கலவரத்தை கட்டுப்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தில் அம்மாநில பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்ததுடன், சில ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவை சித்தரிக்கப்பட்டவை என பாஜக விளக்கம் அளித்தாலும், போராட்டக்குழுக்கள் அதை ஏற்க மறுத்து வருகின்றனர்.

 

ஆடியோ பதிவுகளை முன்வைத்து விசாரணை நடத்தக்கோரி குக்கி மக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஆடியோவை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு மத்திய தடவியல் ஆய்வகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்