முன்ஜாமீன் கிடைக்காததன் எதிரொலி: ப.சிதம்பரம் ஆஜராகிறாரா?

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:10 IST)
ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவில் இருந்து தீவிர முயற்சியில் உள்ளனர். இருப்பினும் ப.சிதம்பரம் எங்கு இருக்கின்றார் என்பது தெரியவில்லை
 
இந்த நிலையில் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் அவர்களின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவை நீதிபதி தலைமை நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்தார். ஆனால் தலைமை நீதிபதி இன்று அயோத்தி வழக்கை விசாரணை செய்ததில் பிசியாக இருந்ததால் அவரால் இந்த மனுவை விசாரணை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த மனு வரும் 23ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால் இடைப்பட்ட இரண்டு நாட்களில் ப.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
 
இந்த நிலையில் ப.சிதம்பரம், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக திட்டமிட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் அவர் ஆஜராக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ப.சிதம்பரம் ஆஜராகும் பட்சத்தில் அவரை விசாரணை செய்யும் அதிகாரிகள், விசாரணைக்கு பின் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்