கிருஷ்ணர் மந்திரங்களை உள்ளடக்கிய MBA படிப்பு அறிமுகம்

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (13:12 IST)
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கிருஷ்ணர் மந்திரங்களை உள்ளடக்கிய  எம்.பி.ஏ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில்   பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான மந்திரங்களை உள்ளடக்கிய 5 ஆண்டு BBA- MBA படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாட்டில் பிரபலமான பல்கலைக்கழகமான அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த படிப்பில் இதுவரை 26 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

மேலும், ராமாணம், வேத உபன்யாசம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளள மேலாண்மை தொடர்பான கருத்தியல்களும் இப்படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்