யோகி ஆதித்யநாத் ஒரு அரசியல்வாதி மற்றும் முதலமைச்சர் மட்டுமின்றி அவர் இந்து மத துறவி. கோரக்நாத் என்ற மடத்தில் மடாதிபதியாக இருந்தவர். இந்து மதத்தைப் பொறுத்தவரை சிறுவயதினராக மடாதிபதிகள் இருந்தாலும் அவர்களது காலில் விழுந்து வணங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தான் ஒரு இந்து மத துறாவி என்ற வகையில் தான் ரஜினிகாந்த் யோகி ஆதித்தினால் காலில் விழுந்து வணங்கி உள்ளார்
சாய்பாபா காலில் விழுந்த திராவிட அரசியல்வாதிகள் குறித்து ரஜினியை விமர்சனம் செய்தவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ரஜினி சொல்வதை, செய்வதை மட்டுமே விமர்சனம் செய்து விளம்பரம் தேடி கொள்ளும் ஜென்மங்கள் எனவும் ரஜினி ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.