கொரோனாவால் குறைந்தது இந்தியர்களின் ஆயுள் காலம்!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (10:28 IST)
கொரோனாவுக்கு பின் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்திருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.   
 
முன்னதாக இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண்களின் சராசரி ஆயுள் காலம் 69.5 வயது ஆகவும், பெண்களின் சராசரி ஆயுள் காலம் 72 வயது ஆகவும் இருந்து வந்தது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 
அதாவது கொரோனாவுக்கு பின் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்திருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 69.5 வயதில் இருந்து 67.5 வயதாகவும், பெண்களின் ஆயுள்காலம் 72 வயதில் இருந்து 69.8 வயதாகவும் குறைந்து இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்