100 ஆண்டுகளை எட்டிய இந்திய ஆப்பிள்!!

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (12:45 IST)
இந்திய மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தில் ஆப்பிள் விளைச்சல் 100 ஆண்டுகளை எட்டியுள்ளது. 


 
 
ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே ஆசியாவில் ஆப்பிள் விளையத்தொடங்கியுள்ளது. ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆப்பிள் விளைச்சல் அதிகமாக உள்ளது.
 
ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கு முதல் முதலாக ஆப்பிள் கொண்டு செல்லப்பட்டு அங்கேயும் ஆப்பிள் விளைச்சல் தொடங்கியுள்ளது. 
 
1916ஆம் ஆண்டு அமெரிக்காவிருந்து தான் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கு முதல் முதலாக ஆப்பிள் கொண்டுவரப்பட்டது.
 
அன்று முதல் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தொடர்ந்து ஆப்பிள் விளைச்சல் நடந்து வருகிறது. தற்போது இந்த விளைச்சல் 100 ஆண்டுகளை எட்டி உள்ளது.
அடுத்த கட்டுரையில்