இருக்க வேலையும் போச்சு..? வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (08:51 IST)
இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளித்துள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடியாக உள்ள நிலையில் அனைத்து துறைகளில் தொழில் போட்டிகள், வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. இதனால் வேலையின்றி பல இளைஞர்கள் கஷ்டபட்டு வருகின்றனர். சிலர் சுயதொழில் செய்து முன்னேறி வந்தாலும், பலருக்கு வேலை வாய்ப்பின்மை பெரும் சிக்கலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவும் டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிள்ளது. கடந்த நவம்பர் மாதம் 8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை ஒரே மாதத்தில் 0.3% ஆக உயர்ந்து 8.3% ஆக மாறியுள்ளது. நகர்புறங்களில் 8.96% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 10.09% ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்