ஆயுத இறக்குமதியில் முதலிடத்தில் இந்தியா! – ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (08:08 IST)
உலக அளவில் அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் இந்தியா உள்ளதாக ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பல தங்கள் ராணுவத்தை பலப்படுத்த சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதுடன், பிற நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை வாங்குகின்றன. உலக அளவில் பல நாடுகளுக்கு ஆயுதம் விற்பனை செய்து வருவதில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில் பிற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை அதிக அளவில் வாங்கிய நாடுகள் குறித்த ஆய்வை ஸ்வீடனை சேர்ந்த சிப்ரி என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2018-2022ம் ஆண்டிற்குள் அதிக ஆயுதங்களை வாங்கிய நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக பிரான்சிலிருந்து ரஃபேல் விமானங்கள், ரஷ்யாவிடமிருந்து நவீன ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இந்தியா வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு அடுத்து சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அதிகமாக சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளது இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்