ஐதராபாத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 3 பேர் பலி !

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (18:48 IST)
ஐதராபாத் மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானதாகவும்,  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மா நிலத்தின் தலை நகர் ஐதராபாத்தில் ஜசாய்குடா,சாய் அங்கர் பகுதியில் மரக்கடை உள்ளது. இம்மரக்கடையில் 30 டிரம்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்கான டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  நேற்று அதிகாலையில், இந்த மரக்குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கேச் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இந்தத் தீ அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளும் பரவியது.

அதிகாலை என்பதால், உறக்கத்தில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற  முடியாமல் தவித்தனர்.

இந்த தீ விபத்தில்,  3 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்