மனைவியைக் கொல்ல விஷப்பாம்பு… உறவினர்கள் நாடகம் – கொலைகார கணவன் சிக்கியது எப்படி ?

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (08:33 IST)
மத்திய பிரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்ய விஷப்பாம்பு வாங்கி கொலை செய்த கணவன் பிரேதப்பரிசோதனையில் குற்றவாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் அமிதேஷ் பட்டாரியா மற்றும் ஷிவானி ஆகிய தம்பதிகள் தங்கள் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஷிவானி தனது படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் விஷப்பாம்பு ஒன்று கிடந்தது. இது சம்மந்தமாக அவரது கணவர் உறவினர்களிடம் ஷிவானியைப் பாம்பு கடித்ததாகவும் அந்த பாம்பை தான் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் கூறி அழுதுள்ளார். ஷிவானியின் கையிலும் பாம்பு கடித்த தடம் இருந்துள்ளது.

விஷயம் போலீஸாருக்கு செல்ல அவர்கள் பிரேதப்பரிசோதனைக்கு ஷிவானியின் சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்கு பின் மருத்துவர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை சொல்லியுள்ளனர். ஷிவானி பாம்பு கடிப்பதற்கு முன்பே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் என அவர்கள் சொல்ல அமிதேஷை போலிஸார் விசாரித்தபோது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களாக தம்பதிகளுக்குள் பிரச்சனை இருந்து வந்தததால் அவரைக் கொலை செய்ய பாம்பு ஒன்றை வாங்கியுள்ளார். படுக்கையறையில் இருந்த மனைவியைத் தலையணை வைத்து அழுத்திக் கொன்று பின்பு பாம்பை அவரது கையில் கடிக்க வைத்துள்ளார். இந்த தகவலைக் கேட்டு அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்